உலகளவில் விமான விபத்துகள் விமானப்படை எச்சரிக்கை.

உலகளவில் விமான விபத்துகளுக்கு ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம்...

Published August 28, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

உலகளவில் விமான விபத்துகளுக்கு ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் பறப்பது முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்பதை விமானப்படையினர் வலியுறுத்தியுள்ளனர்.

விமானம் ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயலாகும் என விமானப்படை அறிக்கை ஒன்றை வௌியிட்டு எச்சரித்துள்ளது.

விமானங்கள் பறப்பதற்கு நேரடித் தடையாக பட்டம் பறப்பது இருப்பதாகவும், கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குராக்கொட, சீனகுடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள போன்ற பகுதிகளில் ஓடுபாதைகளுக்கு அருகில் அடிக்கடி பட்டங்கள் பறப்பது மிகவும் ஆபத்தான பிரச்சினை என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *