ஹெரோயினுடன் நால்வர் கைது!
சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின்..
Published August 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது.
நான்கு பொதிகளில் இருந்து 3 கிலோ 784 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த குற்றச்செயல்களுக்கு உதவியாக இருந்த ஒருவரையும் மாளிகாவத்தை பகுதியில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதாகிய சந்தேகநபர்கள் நால்வரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.