பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேக நபர் கைது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில்...
Published August 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் சந்தேக நபர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகர சபை உறுப்பினர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.