செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Published August 31, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 197 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 181 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 38வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
