மங்காத்தா படம் வெளிவந்து 14 ஆண்டுகள்.. மொத்த வசூல் விவரம்

நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் டாப் 5 திரைப்படங்கள் என எடுத்துக்கொண்டால், கண்டிப்பாக மங்காத்தா படம் அதில் இடம்பெறும். இன்னும் சொல்லப்போனால் அது பல அஜித் ரசிகர்களுக்கு

Published September 1, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் டாப் 5 திரைப்படங்கள் என எடுத்துக்கொண்டால், கண்டிப்பாக மங்காத்தா படம் அதில் இடம்பெறும். இன்னும் சொல்லப்போனால் அது பல அஜித் ரசிகர்களுக்கு அதுதான் டாப்பில் இருக்கும். அந்த அளவிற்கு மாபெரும் மாஸ் சம்பவத்தை தமிழ் சினிமாவில் செய்த திரைப்படம் மங்காத்தா.

இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, வைபவ், அஞ்சலி, பிரேம்ஜி, லட்சுமி ராய் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், மங்காத்தா திரைப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மங்காத்தா திரைப்படம் வெளிவந்தபோது உலகளவில் ரூ. 80 கோடி வரை வசூல் செய்தது.

ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு பிறகு தமிழ் நாட்டில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த படத்தை கொடுத்தவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *