நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை டை : தயாரிக்கும் முறை

பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி

Published September 2, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.

அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் டையை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் ஓடு- 1

வசம்பு – 1

விளக்கெண்ணெய் – 50ப

தேங்காய் எண்ணெய் – 50

தயாரிக்கும் முறை

முதலில் தேங்காய் ஓட்டை தீயில் சுட்டு கரியாக்கிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் அதேபோல் வசம்பையும் தீயில் சுட்டு கரியாக்கிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டையும் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் செய்துவைத்த அந்த பொடியை கலந்தால் போதும் இயற்கையான ஹேர் டை தயார்.

இந்த கலவையை நரைமுடி தெரியக்கூடிய இடங்களில் நன்கு தடவவும்.

இறுதியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலையை மென்மையான ஷாம்பு பயன்படுத்தி அலசினால் போதும்.

இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தினால் போதும் நரைமுடி பிரச்சனை தீரும்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers ஆரோக்கியம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *