சதீஷ் கமகே மீண்டும் விளக்கமறியலில்.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது...
Published September 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.