மன்னாரில் இலவச சித்த மருத்துவ முகாம்
மன்னார் ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்
மன்னார் ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் – பேசாலை கிராமிய சித்த மருத்துவமனை, வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம், யாழ் பல்கலைக்கழக கைதடி சித்த மருத்துவ பீட ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
சித்த மருத்துவத்தின் ஊடாக சுகாதார சுகாதார மேம்பாடு எனும் தொனிப்பொருளில் குறித்த மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பக்க விளைவுகள் அற்ற மூலிகை மருத்துவத்தின் ஊடாக மக்களுக்கு சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த பிரதேச மக்களின் மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு இலவச சித்த மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வைத்திய ஆலோசனைகள், உள நல ஆலோசனைகள், ஆரம்ப ஆய்வு கூட பரிசோதனைகள் உள்ளிட்ட சேவைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, இலவச மருந்துகள் வழங்கப்பட்டன.
குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.