வட கொரிய அதிபர் கிம் ஜாங் – சீனா விஜயம்.
சீனாவில் நடைபெறவுள்ள இராணுவ அணுவகுப்பில்...
Published September 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
சீனாவில் நடைபெறவுள்ள இராணுவ அணுவகுப்பில் கலந்து கொள்ளவதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் சீனா வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டுகள் துளைக்காத பிரத்தியோக ரயில் மூலம் வட கொரிய ஜனாதிபதி சீன எல்லைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கும் ஆண்டு அணிவகுப்பைப் பார்க்கும் நம்பிக்கையுடன் அவர் சீனாவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் அணிவகுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் கலந்து கொள்ள உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.