வீரமுனை நூலகத்திற்கு அருகில் நேர்ந்த விபத்து : ஒருவர் காயம்
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு
Published September 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டியொன்று வாய்க்காலில் விழுந்து விபத்து நேர்ந்துள்ளது.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது காயமடைந்தவர் 26 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியே காயமடைந்த நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.