சம்மாந்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
சம்மாந்துறை - பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று மதியம்
சம்மாந்துறை – பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று மதியம் உருகுலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 15 நாட்களாக காணாமல் சென்றிருந்த நிலையில், இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் நீண்டக்காலம் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடு ஒன்றின் 2ஆம் மாடியில் குறித்த சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை பொலிஸாருக்கு வழங்கியிருந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 15 நாட்களாக காணாமல் சென்றிருந்த நிலையில், உறவினர்கள் தேடி வந்ததுடன், சம்மாந்துறை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட 55 வயது மதிக்கத்தக்கவர் என தற்பொது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மனநிலை பாதிக்ககப்பட்ட இவர் சகோதரி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், காணாமல் சென்றிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.