ஆகஸ்ட் மாதம் ஒரு இலட்சத்தை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை.
நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
நாட்டில் 2025 ஆம் ஆண்டின், ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 235 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்தியாவிலிருந்து 46,473 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 19,764 சுற்றுலாப் பயணிகளும்
ஜெர்மனியிலிருந்து 12,500 சுற்றுலாப் பயணிகளும்
சீனாவிலிருந்து 12,294 சுற்றுலாப் பயணிகளும்
இத்தாலியிலிருந்து 12,247 சுற்றுலாப் பயணிகளும்
பிரான்ஸிலிருந்து 10,495 சுற்றுலாப் பயணிகளும், நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.