நாளாந்தம் மாறும் தங்க விலை : இன்றைய நிலவரம் உள்ளே…
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாரம் தங்க விலை நாளுக்கு நாள்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாரம் தங்க விலை நாளுக்கு நாள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (01), 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 280,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று (02) 2,000 ரூபாயால் அதிகரித்து, 282,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்றும் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 284,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 264,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.