இன்றைய தங்க விலை நிலவரம்
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்க விலையில்
Published September 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தவாரம் தங்க விலை நாளுக்கு நாள் அதிகரிப்பைப் பதிவு செய்து வருகின்றது.
இந்த நிலையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (04) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 284,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 262,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,838 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.