எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவு தின நிகழ்வு

“தந்தை செல்வா” என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின்

Published September 5, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

“தந்தை செல்வா” என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளையும், 41ஆம் ஆண்டு நினைவு நாளையும் முன்னிட்டு கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நேற்று அரசியல் விஞ்ஞானத் துறை மற்றும் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை இணை ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பிரதான உரையை உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைதீன் நிகழ்த்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தந்தை செல்வா, “ஈழத்தின் காந்தி” என அழைக்கப்படுவதற்குரிய தனது அஹிம்சை, நீதி மற்றும் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

அரசியல் என்பது அதிகாரம் பெறுவதற்கான போராட்டம் அல்ல் அது வன்முறையிலும் பழிவாங்கலிலும் அமையக் கூடாது. மாறாக, உரையாடல், கொள்கை, சமாதானம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்.

பல்கலைக்கழகங்களை சமூக ஆராய்ச்சி மற்றும் கல்வி வாயிலாக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை முன்னிறுத்தும் மையமாக செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *