இந்தியரிடமிருந்து போதைப்பொருட்கள் மீட்பு
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை
Published September 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 105 மில்லியன் ரூபா பெறுமதியான 10.750 கிலோ கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இந்தியாவின் புது டெல்லியில் உள்ள ஒரு காலணி விற்பனை நிலையத்தில் பணிபுரிபவர் என்பதுடன், 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தாய்லாந்தின் பேங்கொக்கில் இந்த போதைப்பொருளை வாங்கி, புதுடெல்லிக்கு பயணித்து, அங்கிருந்து இன்று காலை 07.45 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.