கிருசாந்தியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்
செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்
செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட குமாரசாமி கிருசாந்தியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், செம்மணி சந்தி பகுதியில் வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு “வாசலிலே கிருசாந்தி” எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நினைவேந்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
