திடீர் நெஞ்சு வலி : விவசாயி மரணம்
இயற்கை உரம் இடுவதற்கு வயலுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மரண
இயற்கை உரம் இடுவதற்கு வயலுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை – சம்மாந்துறை, மல்வத்தை பகுதியில் நேற்று மாலை விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குறித்தநபர் இயற்கை உரம் இடுவதற்கு அங்கு சென்ற நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் இடைநடுவில் அவர் மரணமடைந்திருந்தார். குறித்தநபர் இருதய நோய் தொடர்பில் கடந்த காலங்களில் சிகிச்சை பெற்று வந்தவர் என கூறப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் சம்மாந்துறை மல் ஆறாம் வீதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க அப்துல் மஜீத் ஆவார்.
குறித்த மரணம் தொடர்பில் சம்மாந்துறை பதில் நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹீர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், நெஞ்சு வலி காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
