யாழில் நூலகம் திறந்தார் ரில்வின் சில்வா

மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில்

Published September 8, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். கந்தர்மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நூலகம் இன்று பிற்பகல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை அடங்கிய புத்தகம் ஒன்று யாழ் ஊடக அமையத்தால் குறித்த நூல் நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *