பொகவந்தலாவையில் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த இருவர் 170 மில்லி கிராம் ஐஸ்...
Published September 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த இருவர் 170 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய வீதி தடைகளை அமைத்து மேற்கொண்ட சோதனையின் போது முச்சக்கர வண்டியில் சென்ற சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவ சிரிபுர,செப்பல்டன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.