எதிர்க்கட்சிகளுடன் இணையும் ஐக்கிய தேசியக் கட்சி.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன்...
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது.
இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற குழு அல்லது இதே போன்ற பொறிமுறையின் மூலம் பணியாற்றவும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
– இது குறித்து ஐ.தே.க தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடி வரும் நிலையில், அந்தக் கலந்துரையாடல்களின் இணக்கம் ஏற்பட்ட விடயங்களை தொடர்ந்து செயல்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிப்படையாகப் பணியாற்ற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.