ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் ரத்து – சட்டமூலம் நிறைவேற்றம்.

நாட்டில் “ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல்” சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் “ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல்” எனும் சட்டமூலம் விவாதிக்கப்பட்டது.
விவாதத்தைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி 150 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேறியமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




