LATEST
உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!
உலகம்

நேபாளம் நாட்டில் நடைபெற்று வரும் மோதல்களில் இலங்கையர்கள்

September 10, 2025 · Tamil Ceylon LK

நேபாளம் நாட்டில் நடைபெற்று வரும் மோதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் இதுவரையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காத்மண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டிலுள்ள சமூக ஊடகக் குழுக்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுமார் 102 இலங்கையர்கள் அந் நாட்டில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் எந் நேரத்திலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நேபாளத்திலுள்ள இலங்கை தூதரகம் அவதானத்துடன் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று (09) இரவு 10 மணி முதல் நேபாள நாட்டின் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பினை இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்க அந்நாட்டு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஆரம்பமான இந்த போராட்டாத்தால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

மேலும் ›