“அநுர சரி, நாங்கள் தவறு” – மஹிந்த கருத்து.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல்...
Published September 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து, இன்று வியாழக்கிழமை (11) வெளியேறினார்.
– இந்நிலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
“போகச் சொன்னார்கள் போகின்றோம். ஆனால், அரசியலை விட்டு போகமாட்டோம். அநுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.