பொரளை துப்பாக்கிச்சூடு: சிறுவன் கைது.
பொரளை சீவலியாபுர பகுதியில் கடந்த மாதம்...
Published September 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பொரளை சீவலியாபுர பகுதியில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிறுவன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலத்கோஹுபிட்டிய, அரமங்கொடையைச் சேர்ந்த 17 வயதுடைய குறித்த சிறுவன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடையவரென்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.