பிரான்ஸில் அரசு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்.
பிரான்ஸில் புதிய அரசு பதவியேற்பதற்கு எதிர்ப்பு...
Published September 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பிரான்ஸில் புதிய அரசு பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் பொலிஸார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் புருனோ தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரைக்கும் 200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை முக்கிய பகுதிகளில் போராட்டங்கள் கூடுவதை தடுத்த பொலிஸார், முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு கண்ணீர்புகை குண்டுகளை வீசியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
