ஆசியக் கிண்ணம்: ஹொங்கொங்கை வீழ்த்திய பங்களாதேஷ்.
ஆசியக் கிண்ண தொடரில் நேற்று வியாழக்கிழமை...
ஆசியக் கிண்ண தொடரில் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ஹொங்கொங் – பங்களாதேஷ் அணிகள் மோதிய போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதையடுத்து ஹொங்கொங் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஹொங்கொங் அணி சார்பாக ஷீஷான் அலி (30 ஓட்டங்கள்), நிஷாகத் கான் (42 ஓட்டங்கள்) மற்றும் யாசிம் முர்தாசா (28 ஓட்டங்களை) ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் நிறைவில் ஹொங்கொங் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து 144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி,
அணியின் தலைவர் (லிட்டன் தாஸ் அரைச் சதத்தின் உதவியோடு 59 ஓட்டங்கள்) இறுதியில் பங்களாதேஷ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவுச் செய்தது.
