பாடசாலை மாணவர்களுக்கு சீருடை நன்கொடை – சீன அரசாங்க ஒப்புதல்.
சீன அரசாங்கம், 2026ஆம் ஆண்டுக்காக இலங்கையின்...
Published September 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சீன அரசாங்கம், 2026ஆம் ஆண்டுக்காக இலங்கையின் அரச – அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளில் கல்வி பயிலும் 44,18,404 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை துணிகளை மானியமாக வழங்க ஒப்புக்கொண்டது.
இது தொடர்பான ஒப்பந்தச் சான்றிதழ்கள், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் சீனத் தூதுவர் கி ஸென்ஹோங் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
சீனா, கடந்த 2025 ஆம் ஆண்டிலும் ரூ.5.17 பில்லியன் மதிப்பில் சீருடை துணி வழங்கியிருந்தது.
மேலும், நண்புறவிற்கான கல்வி நன்கொடை தொடரும் என சீனா அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.