அதிகரிக்கும் முறைப்பாடுகள் !
பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளைப்...
Published September 13, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட WhatsApp இலக்கத்திற்கு, இதுவரை 7,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இலக்கம் — 071-8598888 — புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், சில முறைப்பாடுகள் பொலிஸாருடன் தொடர்புடையவை அல்ல என்றும், பொதுமக்கள் பொலிஸ் தொடர்பான முறைப்பாடுகள் மட்டுமே இந்த எண்ணில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.