ரஷ்யாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை.

ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக

Published September 13, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

7.4 ரிக்டர் அளவில், 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கம்சட்காவின் சில பகுதிகளில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக அவ்விடங்களிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *