ஜனாதிபதி அமெரிக்கா நோக்கிப் பயணம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் 22ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
Published September 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் 22ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக அவர் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.