LATEST
வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம்!36 நாடுகளின் ஆய்வு – இந்தியாவுக்கு இலங்கையில் அதிக ஆதரவு!தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கிய உதவி எண்கள்!பாரிய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!இடியுடன் கூடிய மழை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!ஆகஸ்ட் 18 முதல் ஆசியக் கோப்பை – இலங்கை அணி அறிவிப்பு!வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம்!36 நாடுகளின் ஆய்வு – இந்தியாவுக்கு இலங்கையில் அதிக ஆதரவு!தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கிய உதவி எண்கள்!பாரிய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!இடியுடன் கூடிய மழை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!ஆகஸ்ட் 18 முதல் ஆசியக் கோப்பை – இலங்கை அணி அறிவிப்பு!
உள்ளூர்

2000 ரூபாய் நாணயத்தாளை பொதுமக்கள் ஏற்குமாறு அறிவுறுத்தல்

September 15, 2025 · Tamil Ceylon LK

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025 ஒகஸ்ட் 29 ஆம் திகதி 2000 ரூபாய் புழக்கத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது. 

புதிய நாணயத் தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன. 

இச் செயன்முறையின் முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படியாக பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படும். 

குறித்த நாணயத் தாள் பரிமாற்றப்படுகின்ற இக்காலப்பகுதியில் பொதுமக்களின் ஒத்துழைப்பை இலங்கை மத்திய வங்கி மெச்சுகின்றது. 

அத்துடன் அளவமைக்கும் செயன்முறை நிறைவடைந்தவுடன் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் மூலமும் தங்குதடையின்றி பயன்படுத்தப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.

Related Stories

மேலும் ›