பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி.

ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் - இந்தியா...

Published September 15, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் – இந்தியா இடையிலான போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில்

– Sahibzada Farhan அதிகபட்சமாக 40 ஓட்டங்களையும்,

– Shaheen Shah Afridi 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில்,

– Kuldeep Yadav 03 விக்கெட்டுக்களையும்,

– Jasprit Bumrah, Axar Patel ஆகியோர் தலா 02 விக்கெட்டிக்களை வீழ்த்தினர்.

128 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில்,

– அணித்தலைவர் Suryakumar Yadav அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றதுடன்,

– Abhishek Sharma, Tilak Varma ஆகியோர் தலா 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இதன் மூலம் இந்திய அணி இந்த வெற்றியோடு 2 போட்டிகளில் விளையாடி 2 லும் வெற்றி பெற்று ஆசிய கிண்ண தொடரில் முன்னிலையில் உள்ளது

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *