கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு...
Published September 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக, அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அமர்வில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்படுவதற்கு சட்டமா அதிபர் எதிர்ப்பது உறுதி என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிணை கோரிக்கை தொடர்பான வாதங்கள் தற்போது நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வருகின்றன. பிரதிவாதிகள் சார்பில் வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.