LATEST
பளபளப்பான சருமத்திற்கு வீட்டிலேயே எளிய வழி!வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம்!36 நாடுகளின் ஆய்வு – இந்தியாவுக்கு இலங்கையில் அதிக ஆதரவு!தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கிய உதவி எண்கள்!பாரிய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!இடியுடன் கூடிய மழை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!பளபளப்பான சருமத்திற்கு வீட்டிலேயே எளிய வழி!வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம்!36 நாடுகளின் ஆய்வு – இந்தியாவுக்கு இலங்கையில் அதிக ஆதரவு!தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கிய உதவி எண்கள்!பாரிய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!இடியுடன் கூடிய மழை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
உள்ளூர்

அடுத்த அமர்வுக்கு தயாராகும் பாராளுமன்றம்.

September 17, 2025 · Tamil Ceylon LK

2025 செப்டெம்பர் மாதம் இரண்டாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் கூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2) ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

– செப்டெம்பர் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

– செப்டெம்பர் 24ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

– செப்டெம்பர் 25ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

– செப்டெம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›