அமெரிக்க தூதுவர் ஜூலி சங் – அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வெளிவிவகார...
Published September 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
– இவ் சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பதிவிட்டுள்ளதாவது,
நியாயமான, சமநிலையான வர்த்தகத்தை மேம்படுத்துதல் மற்றும் துறைமுகங்கள் முதல் பொது மக்கள் வரை அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினோம்.
இந்தோ – பசிபிக் பங்காளர்களாக நாங்கள் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தைப் பாதுகாக்கிறோம். பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு முக்கியமான கடல் பாதைகளைப் பாதுகாக்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.