கொழும்பில் நாளை நீர் வெட்டு.
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) 9 மணி நேரம்...
Published September 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முற்பகல் 10:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 12:30 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள், பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவை, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் இவ் நீர் விநியோகத் தடை அமுலாகும்.
என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.