ஆசிய கிண்ணம் : இலங்கை – ஆப்கானிஸ்தான் இன்றைய ஆட்டம்.
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண...
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண T20 போட்டி அபுதாபியில் இன்று (19) இரவு 8:00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
குழு B இலங்கை முன்னிலை வகிப்பதுடன், ஆப்கானிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றால்,இலங்கை அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடன் வெளியேறும். அப்போது, 4 புள்ளிகளுடன் இருக்கும் பங்களாதேஷ் இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதியாகும்.
மாறாக ஆப்கானிஸ்தான் இலங்கையை வீழ்த்தினால் அந்த அணியும் 4 புள்ளிகளைப் பெறும், அது புள்ளிப் பட்டியலை மிகவும் சிக்கலாக்கும்.
அப்போது, ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் ஆகிய மூன்று அணிகளுமே தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். இந்த நிலையில், நெட் ரன் ரேட் (Net Run Rate) அடிப்படையிலேயே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் நிலை உருவாகும்.
எனவே இன்றைய போட்டி ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் ஆகிய மூன்று அணிகள் மிகவும் எதிர்ப்பார்க்கும் முக்கிய போட்டியாக அமைந்துள்ளது. எனவே இன்றைய போட்டி தொடர்பில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
