இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இராமேஸ்வரம் மீனவர்களையும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்கள் கடந்த மாதம் 20ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது செப்டெம்பர் 3 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் அன்றைய தினம் வழக்கினை எடுத்துக்கொண்ட நீதவான் நேற்று (17) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை இன்று (18) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 7 மீனவர்களது விளக்கமறியலை 24ஆம் திகதி வரை நீடித்து நீதவான் உத்தரவை பிறப்பித்துள்ளார்.