உலக தரவரிசையில் – இலங்கை கடவுச்சீட்டு சரிவு.
2025 ஆம் ஆண்டில் உலகளாவிய தரவரிசையில் இலங்கையின்...
Published September 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 ஆம் ஆண்டில் உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் பின்தங்கியுள்ளது.
2024 கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்தில் இருந்த இலங்கை, 2025 செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி, இலங்கை 97 வது இடத்தில் உள்ளது.
ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் நுழையக்கூடிய இடங்களின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.
இந்த குறியீட்டின்படி, சிங்கப்பூர் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக காணப்படுவதுடன், தென் கொரியா மற்றும் ஜப்பான் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.