தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரமடையுமா?
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு...
Published September 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 ஆம் திகதி முதல் மின்சார தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
தொழிற்சங்க நடவடிக்கையின் மற்றொரு கட்டமாக, சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (17) ஆரம்பமானது. அதன்படி, சுகயீன விடுமுறை இரண்டாவது நாளாகவும் அந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
– இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க,
அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்தால், தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும். எனத் தெரிவித்துள்ளார்.