LATEST
மின்னல், பலத்த காற்று – மக்கள் அவதானம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!மின்னல், பலத்த காற்று – மக்கள் அவதானம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!
உள்ளூர்

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் 200 கிராம் “ஜஸ்” பறிமுதல்.

September 20, 2025 · Tamil Ceylon LK

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி நேற்று (19) மாலை பயணித்த புகையிரதத்தில், 4:10 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, கைவிடப்பட்ட பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பையை மீட்டு, புகையிரத அதிபரிடம் ஒப்படைத்தனர்.

பையை பரிசோதித்தபோது, அதில் 252 பெக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் “ஜஸ்” வகை போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்த பொலிஸார், பையை மீட்டு, அதிலிருந்த போதைப் பொருளை கைப்பற்றினர்.

மேலும், இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›