தங்காலை போதைப்பொருள் பறிமுதல் – லொறி உரிமையாளர்கள் கைது.

தங்காலையில் நேற்று திங்கட்கிழமை (22) அன்று 3 லொறிகளில் இருந்து 705 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டது. 3 லொறிகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கல்கிஸ்ஸை, எல்பிட்டிய மற்றும் மீட்டியாகொட பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள “உனாகுருவே சாந்த” என்ற குற்றவாளியின் ஊடாக இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Follow & Share




