தேயிலை விவசாயிகளுக்காக QR குறியீடு அறிமுகம்.

நாட்டில் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு...

Published September 23, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

நாட்டில் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, எதிர்காலத்தில் உரங்களை விநியோகிக்கும்போது QR குறியீட்டை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதற்கான அமைச்சரவை ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், அதன்படி, இந்த செயல்முறையின் முதல் கட்டம் இந்த மாதம் 26 ஆம் தேதி மதுகம பகுதியில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள ரூ.200 மில்லியன் தேயிலை உர மானியத்திற்காக இந்த QR குறியீடு செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

– இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர் சமந்த வித்யாரத்ன,

2025 ஆம் ஆண்டுக்கு தேயிலை உரத்திற்காக எங்கள் தேயிலை வாரியம் ரூ. 2,000 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

“உரங்களை வழங்குவதற்கான புதிய முறையைப் பின்பற்றுவதற்கு அமைச்சரவையில் இருந்து எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது”

மானியம் வழங்க நிதி ஒதுக்கியுள்ளோம். குறிப்பாக, அவர்களில் 75% பேர் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள். அவர்களை இலக்காகக் கொண்டு ரூ. 200 மில்லியன் தேயிலை உர மானியத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

QR குறியீடு ஒன்றின் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிமுகம் வழங்கும் நிகழ்வினை இம் மாதம் 26 ஆம் தேதி களுத்துறையில் ஒரு விழாவாக நடத்த உள்ளோம்.

இந்த ஆண்டு தேயிலை உரத்தை வழங்கும் செயல்முறை மிக விரைவில் தொடங்கும், இது மதுகமவின் இத்தபன பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும். எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *