“ஜனநாயகன்” ட்ரீட் தீபாவளிக்கு ரெடி !
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் "தளபதி விஜய்" நடித்துள்ள திரைப்படம்...
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் “தளபதி விஜய்” நடித்துள்ள திரைப்படம் “ஜனநாயகன்”. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும், அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக தளபதி விஜய் தெரிவித்துவிட்டார், அதனால் இத் திரைப்படத்தை கொண்டாடுவதற்காக உலக ரசிகர்கள், மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9 ஆம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந் நிலையில், “ஜனநாயகன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, “ஜன நாயகன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாகவும், இப்பாடலை தளபதி விஜய் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலோடும், உற்சாகத்தோடும் உள்ளனர்.