மோடி – ட்ரம்ப் விரைவில் சந்திப்பு !
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் - இந்திய பிரதமர்...
Published September 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் விரைவில் நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
– இது தொடர்பில் அவர் கூறியதாவது,
”மோடி மற்றும் ட்ரம்ப் இருவரும் நேரில் சந்திப்பதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் நேர்மறையான உறவைக் கொண்டுள்ளனர்.
இந்தோ – பசுபிக் கூட்டமைப்பின் குவாட் உச்சி மாநாட்டுக்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறலாம். என அமெரிக்க உள்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி அவர் தெரிவித்துள்ளார்.