நாமலுக்கு எதிராக விசாரணை ஒத்திவைப்பு !

சர்ச்சைக்குரிய "கிரிஷ்" திட்டம் தொடர்பாக இலங்கை...

Published September 26, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

சர்ச்சைக்குரிய “கிரிஷ்” திட்டம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை டிசம்பர் 18 ஆம் தேதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

வழக்கை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து அசல் வழக்கு அறிக்கையை வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான “கிரிஷ்” நிறுவனத்திடமிருந்து

ரூ. 70 மில்லியன் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *