ராஜித சேனாரத்ன மீது குற்றப்பத்திரிகை.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகற்றும் ஒப்பந்தம் தொடர்பாக...
Published September 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகற்றும் ஒப்பந்தம் தொடர்பாக ரூ.2.6 மில்லியனுக்கு அதிக இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ராஜித சேனாரத்ன, உபாலி லியனகே ஆகியோர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு 2026 ஜனவரி 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.