உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு
சீனாவிலுள்ள உலகின் மிக உயரமான ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் இன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
Published September 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சீனாவிலுள்ள உலகின் மிக உயரமான ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் இன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து குய்சோவில் உள்ள மற்றொரு பாலத்தின் பொறியியல் சாதனையை இந்த பாலம் முறியடித்துள்ளது.

சீனாவின் கரடுமுரடான தெற்கு மாகாணமான குய்சோவில் உள்ள நதி மற்றும் பரந்த பள்ளத்தாக்கின் மேலே 625 மீட்டர் உயரத்தில் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் அமைந்துள்ளது.

இந்த பாலம் திறப்பு நிகழ்வில் திட்ட பொறியாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.