கொட்டாவையில் 458 தோட்டாக்கள், T-56 கோப்புடன் ஒருவர் கைது.
கொழும்பு - கொட்டாவை பகுதியில் 458 தோட்டாக்கள் மற்றும்...
Published September 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கொழும்பு – கொட்டாவை பகுதியில் 458 தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 கோப்புடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவை, அங்குலான பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
கைது மிருந்து 75 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 30 போலி வாகன இலக்கத்தகடுகள், 15 வாகன வருமான உத்தரவு பத்திரங்கள், 15 காப்பீட்டுச் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.